திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகராட்சி இன்ஜினியர் மற்றும் அவரது மனைவி 6 ஆண்டுகளில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.3.59 கோடி சொத்து குவித்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
| திருநெல்வேலி மாவட்டம் சாந்திநகர் 28வது தெருவை சேர்ந்தவர் லெனின்(54). இவர் திருநெல்வேலி மாநகராட்சியில் உதவி இன்ஜினியராக 1997ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3ம் தேதி முதல் பணியாற்றி வருகிறார்.
இவரது மனைவி சாந்தகுமாரி. இவர் திருநெல்வேலி தூய சவேரியார் கல்லூரியில் 2016ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி முதல் உதவி பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். இருவரும் அரசு ஊழியர்கள் என்ற வரையறைக்குள் வருகின்றனர். |

