தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வட்டம், வல்லநாட்டில் அமைந்துள்ள சுதந்திர போராட்ட வீரர் வீரன் வெள்ளையத்தேவன் அவர்களின் மணிமண்டபத்தில் அன்னாரது 255 ஆவது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் சார்பில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ச.அஜய் சீனிவாசன் அவர்கள் சுதந்திர போராட்ட வீரர்
வெள்ளையத்தேவன் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி
சுதந்திர போராட்ட வீரர் வீரன் வெள்ளையத்தேவன் அவர்களின் வாரிசுதாரரான திரு.ஏ.மாரிமுத்து அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் திரு.சிவக்குமார் அவர்கள்,செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.சே.ரா.நவீன் பாண்டியன் அவர்கள் ஆகியோர் உடன் உள்ளனர்.
