December 1, 2025
#செய்தி #தூத்துக்குடி மாவட்டம்

ஆண்களுக்கு நிகராக பல்வேறு உயர்பதவிகளுக்கும் பெண்கள் வரவேண்டும். பொியசாமி நினைவு கல்வி அறக்கட்டளை விழாவில் அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.

தூத்துக்குடி மறைந்த திமுக மாவட்ட செயலாளர் என்.பொியசாமி நினைவு கல்வி அறக்கட்டளை சார்பில் பெண்களுக்கு இலவசமாக கணினி, தையல் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சி வகுப்பில் அதற்கென பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு 6 மாதம் பயிற்சிகள் வழங்கப்படுகிறது.

முதல் முகாமில் முடித்த மாணவிகளுக்கு சான்றிதழ் புதிய மாணவிகள் சேர்க்கை வடக்கு மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் தலைமை வகித்தாா். என்.பொியசாமி நினைவு கல்வி அறக்கட்டளை இயக்குநரும் மாநகர திமுக இலக்கிய அணி அமைப்பாளருமான ஜீவன்ஜேக்கப் முன்னிலை வகித்தார். தையல் பயிற்சி ஆசிாியர் அருணாதேவி, கணினி பயிற்சி ஆசிாியர் கவிதா ஆகியோர் வரவேற்புரையாற்றினார்கள்.

விழாவில் முதல் முகாமில் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி, இரண்டாவது பயிற்சி முகாமிற்கு மாணவிகள் சேர்க்கையை தொடங்கி வைத்தது அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில் இந்த இலவச பயிற்சியின் மூலம் எல்லோரும் நன்மையடைய வேண்டும் என்ற அடிப்படையில் தொடங்கப்பட்டு இந்த மாவட்டத்தில் உள்ள பெண்களுக்கு வழங்கப்படுகிறது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் பெண்களுக்கென்று ஏராளமான திட்டங்களும் நன்மைகளும் கிடைக்கப் பெற்றுள்ளன.

குறிப்பாக இலவச பேருந்து பயணம் மகளிர் உாிமைத் தொகை மாணவிகளுக்கு கல்லூாி உதவித்தொகை அரசியல் மற்றும் அரசு வேலைவாய்ப்பில் அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. தையல் பயிற்சி முடித்தவர்களுக்கு அரசின் இலவச தையல் இயந்திரம் பெற்றுகொள்ளும் வாய்ப்பும் கணினி கற்றுகொண்டவர்களுக்கு அரசுத்துறையில் பல்வேறு வாய்ப்புகளும் கிடைக்கப்பெறும் எந்த பணியை செய்தாலும் அதில் முழு ஈடுபாடுடன் கவனம் செலுத்தி முயற்சி மேற்கொண்டு பயிற்சி எடுத்துக்கொண்டால் எல்லா துறைகளிலும் சாதிக்கலாம் பெண்களும் எல்லாத்துறைகளிலும் ஆண்களுக்கு நிகராக பல்வேறு உயர்பதவிகளுக்கும் வரவேண்டும். பல சாதனைகளையும் செய்ய வேண்டும். என்ற தொலைநோக்கு பார்வையோடு தான் இந்த அறக்கட்டளை தொடங்கப்பட்டதின் நோக்கமாகும்.

போட்டி நிறைந்த உலகத்தில் நமது திறமையின் மூலம் தான் சாதிக்க முடியம் வெற்றி ஒன்றே நமக்கு குறிக்கோள் என்ற என்னத்தோடு பயிற்சி முடித்தவர்கள் பல வகையிலும் வெற்றி பெற வேண்டும். பயிற்சிக்கு வந்துள்ள மாணவிகள் சாதனை படைக்க வேண்டும். என்று எல்லோரையும் கேட்டுக்் கொள்வதுடன் இதில் கலந்து கொண்ட அனைவரையும் மனதார வாழ்த்துகிறேன் என்று பேசினார்.

விழாவில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி மண்டலத்தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, அன்னலட்சுமி, நிா்மல்ராஜ், பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், சுரேஷ்குமார், ராமகிருஷ்ணன், ஜெயக்குமார், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கவிதாதேவி, தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அபிராமிநாதன், மாணவரணி அமைப்பாளர் வக்கீல் சீனவாசன், மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் பிரபு, நாகராஜன், மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், செல்வக்குமார், மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், மாநகர சிறுபான்மை அணி அமைப்பாளர் சாகுல்அமீது, மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் ரவி, பெருமாள்கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், கவுன்சிலர்கள் கந்தசாமி, அந்தோணிபிரகாஷ்மார்ஷலின், மகளிர் அணி துணை அமைப்பாளர் இந்திரா, பகுதி இளைஞர் அமைப்பாளர் சூா்யா, வட்டச்செயலாளர் பாலகுருசாமி, பகுதி பொருளாளர் உலகநாதன், வட்டப்பிரதிநிதி பாஸ்கா், மற்றும் மணி, மாாிமுத்து, அல்பட், மற்றும் பயிற்சி பெற்ற மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவனிடம் எனக்கு சைக்கிள் வேண்டும் உதவி செய்யுங்கள் என்று கோாிக்கை வைத்த மாணவணுக்கு புதிய சைக்கிளும் மாநகர பகுதியில் சாலையோர பகுதியில் வியாபாரம் செய்யும் சிறுமற்றும் குறு வியாபாாிகளுக்கு வெயில் மற்றும் கோடைகாலங்களில் பாதுகாப்பாக இருந்து வியாபாரம் செய்வதற்கு வசதியாக பொிய ஸ்டாண்டுடன் கூடிய குடை வழங்கினார். பெற்றுக்கொண்டவர்கள் நன்றி தொிவித்துக்கொண்டனர்.